தூத்துக்குடி

காயல்பட்டினம் மகளிர் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

DIN


காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளியல் துறை சார்பாக இந்திய அரசின் வரிச் செயல்திறன்'என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
துறைத் தலைவி எல்.நூர் அஸ்மா வரவேற்றார்.  கல்லூரியின் நிறுவனர் தலைவர் எஸ். செய்யது அப்துல் ரகுமான் தலைமை வகித்தார்.     கல்லூரிச் செயலர் எம்.எம். மொகுதஸீம், நிர்வாக உறுப்பினர் எம்.எம். முகம்மது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குநர் மெர்சி ஹென்றி, கல்லூரி முதல்வர் இரா.செ.வாசுகி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்காவைச் சேர்ந்த கல்லூரி இணைப் பேராசிரியர் சௌசன்யா தர்மாசங்கர், திருநெல்வேலிலி ராணி அண்ணா மகளிர் கல்லூரி பொருளியல் துறைத் தலைவர் ஜி. மகாலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  பின்னர் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சிக்கு பேராசிரியை எம்.திருமதி வரவேற்றார். கல்லூரித் துணைச் செயலர் எஸ்.ஏ.ஆர். அஹமது இஸ்ஹாக் வாழ்த்திப் பேசினார்.  சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் ஆதித்தனர் கல்லூரி பொருளியல் துறைத் தலைவர் சி.ரமேஷ் கலந்துகொண்டு பேசினார். இக்கருத்தரங்கில் 18 கல்லூரிகளைச் சேர்ந்த 234 மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். பேராசிரியை ஆ. சண்முக பிரியா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT