தூத்துக்குடி

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப் பொங்கல் திருவிழா

DIN


கோவில்பட்டி 3ஆவது செக்கடித் தெருவில் உள்ள 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப் பொங்கல் திருவிழா நடைபெற்றது. 
இக்கோயில் ஆடிப் பொங்கல் திருவிழா கால்நாட்டு கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு,  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சக்தி கரகம் எடுத்தல், வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெற்றன. 
வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பால்குடம் எடுத்தல், காலை 8 மணிக்கு அக்னிச்சட்டி எடுத்து வீதியுலா, மாலை 4 மணிக்கு பொங்கல் திருவிழா ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்தனர். பின்னர், 54  அக்னிச்சட்டி வீதியுலா நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெற்றது. 
சனிக்கிழமை (ஆக. 10) காலை 10 மணிக்கு கூழ் காய்ச்சுதல், நண்பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு, மாலை 4 மணிக்கு முளைப்பாரி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
ஏற்பாடுகளை சங்கத் தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் கண்ணன், செயலர் மூர்த்தி, துணைச் செயலர் சம்பத், பொருளாளர் ஜானகிராமன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT