தூத்துக்குடி

கிருஷ்ணாபுரம் பிரம்ம சக்தியம்மன் கோயில் கொடை விழா

DIN

கிருஷ்ணாபுரம் ஸ்ரீபிரம்ம சக்தியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது. 
தொடக்கநாளன்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பிற்பகல் 1 மணிக்கு சங்குமுகம் தீர்த்தம் எடுத்து செல்லுதல், கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோயிலிலிருந்து தீர்த்தம் ஊர்வலமாக வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு புனித தீர்த்தம் எடுத்து வந்து கும்பம் ஏற்றுதல், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8 மணிக்கு மாக்காப்பு அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன. 
இரண்டாம் நாளன்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், சக்தி ஹோமம், காலை 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து கருங்குளம் ஆற்றிலிருந்து கரகம் தீச்சட்டி மற்றும் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு பொங்கலிடுதல் , மாலை 6 மணிக்கு கனி வகைகள் பூஜை, இரவு 7 மணிக்கு மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல், இரவு 10 மணிக்கு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு இரவு உச்சி காலபூஜை, இரவு 1 மணிக்கு மஞ்சள் நீராடுதல் ஆகியவை நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT