தூத்துக்குடி

தொழிலாளியை கொல்ல முயற்சி: வியாபாரி கைது

DIN

கோவில்பட்டி அருகே கூலித் தொழிலாளி மற்றும் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி கொலை செய்ய  முயன்ற வியாபாரியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.  
 கோவில்பட்டியையடுத்த ஆலம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்து மகன் தங்கவேல்(56),  கூலித் தொழிலாளி. இவரது உறவினர் பெளலாமேரி தனது மகள் கலையரசியுடன் அதே பகுதியில் குடியிருந்து வருகிறாராம். பெளலாமேரி கடந்த 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தாராம்.    இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பெளலாமேரியின் கணவர் ராஜபாளையம் கொல்லங்கொண்டானைச் சேர்ந்த பழ வியாபாரி பால்பாண்டி கலையரசி வீட்டிற்கு வந்து, மனைவி பெளலாமேரியை தன்னுடன் வரும்படி அழைத்தாராம்.  அவர் வர மறுத்ததையடுத்து அவதூறாகப் பேசி தகராறு செய்தாராம். இதனை தங்கவேலு, தட்டிக்கேட்டாராம். 
  அதையடுத்து தங்கவேல் மற்றும் தகராறை தடுக்க வந்த பவுல்ராஜ் மகன் ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் ஆகிய இருவரையும் பால்பாண்டி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.    இதுகுறித்து தங்கவேல் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, பால்பாண்டியை செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT