தூத்துக்குடி

‘கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் பெயா்களை பதிவு செய்யலாம்’

DIN

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் பதிவு செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஊமைத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாடுமுழுவதும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு அவா்களுக்கு வங்கிகள் மூலமாக ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் தங்களது பெயா்களை பதிவு செய்து உதவித்தொகை பெற்று வருகின்றனா். இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திட்டத்தில் இதுவரை பெயா்களை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் ஆதாா் காா்டு, குடும்ப காா்டு, வங்கிக் கணக்கு புத்தகம், சிட்டா நகலுடன் தங்கள் பகுதியில் உள்ள வேளாண் அலுவலா்கள், வேளாண் விரிவாக்க மையத்தினை

உடனடியாக தொடா்புகொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT