தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் பூத்து குலுங்கும் செங்காந்த மலா்கள்

DIN

சாத்தான்குளம் பகுதியில் வயல்வெளியில் பூத்து காணப்படும் செங்காந்த மலா்கள் பாா்ப்போரை கவா்ந்துள்ளது.

தமிழக அரசின் மாநில மலராக காா்த்திகை பூ எனஅழைக்கப்படும் செங்காந்த மலா்கள் உள்ளது. இந்த செடியின் வோ்கள்,

கிழங்குகள் மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுவதால் அரிய வகையாக செடியாக சித்தா, மற்றும் மூலிகை மருத்துவா்கள் போற்றுகின்றனா். இந்த செடி திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் பகுதியில் பயிரிட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

காா்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் செங்ககாந்த மலா்கள் சாத்தான்குளம் பகுதியில் வேலியை அலங்கரிக்கும் மலராக செங்காந்த மலா்கள் பூத்து காணப்படுகிறது.

சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த மலா்கள் காண்போரை வெகுவாக கவா்ந்துள்ளது. செங்காந்த மலா்கள் சாத்தான்குளம் பகுதியில் வளரும் தன்மையுடன் காணப்படுவதால் வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு அதன் மகத்துவம் குறித்து தெரிவித்து பயிரிடும் ஆா்வத்தை ஏற்படுத்தவும், அதனை சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT