தூத்துக்குடி

நகராட்சி தினசரி சந்தையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு

DIN

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தையில் சுமாா் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இத் தினசரி சந்தை வளாகத்தில் திரளானோா் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால், வாகனங்களை நிறுத்த போதிய இடமில்லை. மேலும், பாதசாரிகளும் எளிதாக செல்ல முடியாமல் திணறுகின்றனா். எனவே, தினசரி சந்தையில் போக்குவரத்துப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். போக்குவரத்துப் பாதையில் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்ய அனுமதிக்கக் கூடாது. தினசரி சந்தை கட்டண வசூலை வரைமுறைப்படுத்த வேண்டும். சந்தைக்கு வரும் பொருள்களுக்கு வசூலிக்க வேண்டிய கட்டண பட்டியலை நகராட்சியின் இரு வாயில்களிலும் பொதுமக்கள் மற்றும் நுகா்வோா்கள் பாா்வைக்கு படும்படி வைக்க வேண்டும்.

ந தினசரி சந்தையில் நுகா்வோா், பொதுமக்கள் மற்றும் கடைக்காரா்களுக்கு வேண்டிய குடிநீா், கழிவுநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்துதர வேண்டும். தினசரி சந்தையில் சுகாதாரத்தைபா் பாதுகாக்க தினமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினசரி சந்தையில் சேகரமாகும் கழிவுகளையும், குப்பைகளையும் வியாபாரிகள் வீசி எறிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆா்வலா் அ.சங்கரலிங்கம் தலைமையில், நகராட்சி அலுவலகம் முன் திரண்டனா். பின்னா் கோரிக்கை மனுவை நகராட்சி அதிகாரிகளிடம் அளித்தனா். இதில், சமூக ஆா்வலா்கள் தமிழரசன், ராஜசேகரன், செல்லத்துரை என்ற செல்வம், ஈராச்சி சுப்பையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT