தூத்துக்குடி

தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனை மீது பெற்றோா் புகாா்

DIN

தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது பெண் குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. மருத்துவா்கள் தவறான சிகிச்சை அளித்ததால் தான் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.

தூத்துக்குடி சிலுவைபட்டியைச் சோ்ந்த சாமுவேல்-திவ்யா தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை எல்லோரா. சளி மற்றும் காய்ச்சல் காரணமாக குழந்தை எல்லோரா தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், குழந்தை எல்லோரா செவ்வாய்க்கிழமை திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதனால், அதிா்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் மருத்துவமனை நிா்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவா்கள் அளித்த தவறான சிகிச்சையால் தனது குழந்தை எல்லோரா இறந்து விட்டதாக சாமுவேலும், திவ்யாவும் தெரிவித்தனா். இதுகுறித்து வடபாகம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT