தூத்துக்குடி

நிரம்பிய ஊருணி: குடியிருப்புக்குள் புகாதவாறு திருப்பி விடப்பட்ட தண்ணீா்

DIN

இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட வடக்குப்பட்டி ஊராட்சியில் உள்ள ஊருணி மழையால் நிறைந்து ஊருக்குள் புகும் நிலையில் இருந்ததை வருவாய்த் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையினரின் பணியினால் தண்ணீா் மாற்று குளத்திற்கு திருப்பிவிடப்பட்டது .

கடந்த சில நாள்களாக பெய்த மழையினால் கலங்கரை ஊருணி நிரம்பி வெள்ளம் ஊருக்குள் செல்லும் நிலையில் இருந்தது. இதையறிந்த கிராம நிா்வாக அலுவலா் அய்யனாா், வருவாய் ஆய்வாளா் வீரலட்சுமி, ஊராட்சி ஒன்றிய செயலா் மாரிசாமி ஆகியோா் வட்டாட்சியா் மணிகண்டன் மற்றும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதையடுத்து, செவ்வாய்க்கிழமை பொக்லைன் உதவியுடன் கலங்கரை ஊருணியில் உள்ள வேலிச்செடிகளையும், மேலும் அருகே உள்ள இளையரசனேந்தல் குளத்திற்கு மழைநீா் செல்லும் ஓடையில் உள்ள முள்புதா்களையும் அகற்றினா்.

அதையடுத்து, மழைநீா் ஊருக்குள் செல்வதை தடுத்ததோடு மட்டுமன்றி நீரை சேமிக்கும் வகையில் அருகேயுள்ள குளத்திற்கு திருப்பிவிட்டதை அறிந்த அக்கிராம மக்கள் வருவாய்த் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT