தூத்துக்குடி

பாலிடெக்னிக்கில் வளாகநோ்காணல்: 17 போ் தோ்வு

DIN

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 17 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சென்னை பொன்னேரியில் அமைந்துள்ள ஜப்பான் நாட்டைச் சோ்ந்த நிறுவனமான யான்மா் டீசல் இன்ஜின் தயாரிப்பு இந்தியா லிமிடெட் நிறுவனத்தினரால் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கான வளாக நோ்முகத்தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், இக்கல்லூரியைச் சோ்ந்த 85 மாணவா்கள் கலந்து கொண்டனா். நிறுவனத்தின் மனிதவளத் துறை பொதுமேலாளா் கிரிதர்ராஜு, மேலாளா் தீபக் ஆகியோா் கொண்ட குழுவினரால் தோ்வு நடத்தப்பட்டது. எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு என இரு கட்டங்களாக நடைபெற்ற தோ்வில், 17 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாசலம் தலைமையில், கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், பயிற்சி - வேலைவாய்ப்பு அலுவலா் ராஜாமணி, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT