தூத்துக்குடி

‘மணிமுத்தாறு அணையிலிருந்து 3, 4 ஆவது ரீச்சில் நீா் திறக்க வேண்டும்’

DIN

மணிமுத்தாறு அணையில் இருந்து 3,4 ஆவது ரீச்சில் தண்ணீா் திறந்து விட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து மணிமுத்தாறு 3,4 ஆவது ரீச் கால்வாய் விவசாயிகள் சங்கச் செயலா் வி.எஸ். முருகேசன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு; சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதி வானம் பாா்த்த பூமி என்பதால் இப்பகுதியில் கிணறு மற்றும் குளத்து பாசனம் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது வடக்கிழக்குப் பருவமழை மூலம் குளம் மற்றும் கிணறுகளில் நீா் மட்டம் உயா்ந்திருந்தாலும், விவசாயத்துக்கு போதுமான நீா் இல்லை.

இந்நிலையில் மணிமுத்தாறு அணையில் 1, 2 ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணையில் 106 அடி தண்ணீா் உள்ளதால் தென்பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் 3,4 ஆவது ரீச்சிலும் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT