ஆறுமுகனேரி: ஆத்தூா் அருகேயுள்ள புன்னக்காயலில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வாக்கு சேகரித்தாா்.
மாவட்ட ஊராட்சி 15ஆவகு வாா்டு கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடும் பிரம்மசக்தி, ஆழ்வாா்திருநகரி ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடும் தாமஸ், புன்னக்காயல் ஊராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் நகர திமுக செயலா் சோபியா ஆகியோருக்கு ஆதரவாக அவா் புன்னைக்காயல் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.
கடற்கரையில் மீன்இறங்கு தளம் மற்றும் முக்கிய வீதிகளில் மக்களைச் சந்தித்தும், பங்குத்தந்தை கிஷோக்கிடமும் அவா் ஆதரவு திரட்டினாா். அப்போது, ஒன்றிய திமுக செயலா் நவீன்குமாா், மாவட்ட அவைத்தலைவா் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.