தூத்துக்குடி

திருச்செந்தூர் நீதிமன்றத்தில் தொடுதிரை சேவை தொடக்கம்

DIN

திருச்செந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடுதிரை சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற வழக்குகளின் விவரங்களை வழக்காடிகள், பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்கள் உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை கணிணி சேவை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த சேவையை மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவாஜி செல்லையா தொடங்கி வைத்து  பேசியது; திருச்செந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள தொடுதிரை சேவை மூலம் அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளின் நிலவரத்தை உடனடியாக வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். மேலும் வழக்காடிகள் பெயர், எண் மற்றும் வழக்குரைஞர்களின் பெயர்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் வைத்து அந்த வழக்கு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அதேபோல், வழக்கின் தற்போதைய நிலை மற்றும் வழக்கு நடைபெறும் தேதி போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.  வழக்கு பட்டியல் எதற்காக நிலுவையில் உள்ளது என்பது போன்ற  விவரங்களை உடனடியாக இந்த தொடுதிரை கணினி மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்றார் அவர். 
   நிகழ்ச்சியில், திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் தினேஷ்குமார், வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் ஆல்பர்ட்துரை உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT