தூத்துக்குடி

கோவில்பட்டியில் காசநோய் விழிப்புணர்வு முகாம்

DIN

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நோய் கண்டறியும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம், கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமை வகித்து பேசுகையில்,  2018 இல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காசநோய் கண்டறியப்பட்டு 443  பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  "சிபிநாட்' எனும் அதிநவீன கருவி மூலம் காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
காசநோயாளிகளின் உணவுமுறை குறித்து மருத்துவ அலுவலர் பூவேஸ்வரி, காசநோய் பாதித்தவர்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்து மாவட்ட நலக் கல்வியாளர் தங்கவேல் ஆகியோர் பேசினர். மேற்பார்வையாளர் காசிவிஸ்வநாதன், காசநோய் பார்வையாளர் மகேஷ், ஆய்வக நுட்பநர் ராஜகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ரோட்டரி சங்கத் தலைவர் ஆசியா ஃபார்ம்ஸ் பாபு வரவேற்றார். மேற்பார்வையாளர் இசக்கி மகாராஜன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT