தூத்துக்குடி

பேய்க்குளம் அருகே தடுப்பணைகள் சேதம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN


பேய்க்குளம் அருகே தடுப்பணையை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
செங்குளம் பெரியகுளத்திலிருந்து விராக்குளம் செல்லும் பாதையில் உள்ள தடுப்பணை தற்போது மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதற்கு இடையே உள்ள 4 தடுப்பணைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதி குளங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மணிமுத்தாறு அணையிலிருந்து வரும் தண்ணீரும் தேங்கி நிற்காது எனவும், விராக்குளத்துக்கு தண்ணீர் உடனடியாக வரவேண்டும் என்பதற்தாக சிலர் தடுப்பணையை உடைத்து சேதப்படுத்தியிருக்கலாம் எனவும் அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். 
எனவே, அதிகாரிகள் சேதமான தடுப்பணைகளை பார்வையிட்டு அதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT