தூத்துக்குடி

தூத்துக்குடியில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

DIN

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் மதுரை மண்டலம் மற்றும் முத்துநகர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய,  எரிபொருள் மற்றும் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பிருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.  தொடர்ந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைமை மண்டல மேலாளர் சிவக்குமார் தலைமையில் எரிபொருள் சிக்கன உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க துணை ஆளுநர் கண்ணன், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன தூத்துக்குடி மேலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
முத்துநகர் கடற்கரையில் நிறைவு பெற்ற பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT