மீனவ இளைஞர்கள் மாயம்
காயல்பட்டினத்தில் இரு இளைஞர் மாயமானது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயல்பட்டினத்தில் இரு இளைஞர் மாயமானது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயல்பட்டினம் சிங்கித்துறை வடக்கு காலனியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். மீனவர். இவரது 2ஆவது மகன் ஆலன்ராய்ஸ்(16). அதே பகுதியைச் சேர்ந்த இருதயம் மகன் ஆகாஷ் (18). இவர்கள் இருவரும் கடல் தொழில் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நண்பர்களான இருவரும் திங்கள்கிழமை மாலை கடற்கரைக்குச் சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவர்கள், செவ்வாய்க்கிழமை மாலை வரை வீடு திரும்பவில்லை.
இதையடுத்து பெற்றோர்களும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஆரோக்கியராஜ் ஆறுமுகனேரி போலீஸில் அளித்த புகாரின்பேரில், உதவி ஆய்வாளர் மாடசாமி வழக்குப் பதிவு செய்து, இருவரையும் தேடி வருகிறார்.