தூத்துக்குடி

ஏரல் விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN


ஏரலில், சைவ செட்டியார் மற்றும் சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உண்மை விநாயகர் கோயிலிலில் வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், காலை 10.30 மணிக்கு விமான அபிஷேகம், தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம், பிற்பகல் 12.30 மணிக்கு உச்சிகால தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில், திருக்கைலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103ஆவது குரு மகா சன்னிதானம் சிவப்பிரகாச சத்யஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கி, ஆலய பிரஹாரத்தில் மரக்கன்றுகளை நட்டார். ஏற்பாடுகளை தலைவர் நங்கமுத்து செட்டியார், செயலர் வீரபாகு பிள்ளை, பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ஆத்தூர் சந்தன மாரியம்மன் கோயிலில்...
ஆத்தூர் அருள்மிகு சந்தனமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூர் சைவ வேளாளர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில், வருஷாபிஷேகத்தை   முன்னிட்டு காலை 8.30 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து லெட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடைபெற்றன. காலை 10.30 மணியளவில் விமான அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 6 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார படைப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர் எம்.எஸ்.சக்திவேலாயுதம் பிள்ளை குடும்பத்தினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT