தூத்துக்குடி

தரமற்ற உணவுப் பொருள் விற்பனை: கடை உரிமையாளருக்கு அபராதம்

DIN


கோவில்பட்டியில் தரமற்ற, பாதுகாப்பற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்ததாக, கடை உரிமையாளர் மற்றும் விற்பனையாளருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 
கோவில்பட்டி - சாத்தூர் பிரதான சாலையில் உள்ள இனிப்பகத்தில் 9.9. 2018இல் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி, உணவுப் பொருள்களை மாதிரிக்கு எடுத்து, பகுப்பாய்வுக்கு அனுப்பினர். அதில், பாதுகாப்பற்ற, தரமற்ற உணவுப் பொருள்கள் என்பதற்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றதாம். இதையடுத்து, கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
வழக்கை விசாரித்த நீதிபதி சங்கர், அந்த கடை விற்பனையாளர் கு.கணேசன்(35)  மற்றும் உரிமையாளர் க.ராஜ்குமார்(49) ஆகியோருக்கு  தலா ரூ.10ஆயிரம் அபராதமும், நீதிமன்றம் கலையும் வரை சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT