தூத்துக்குடி

"நாசரேத் பேரூராட்சியில் குடிநீரை மோட்டார் மூலம் உறிஞ்சினால் அபராதம்'

DIN

நாசரேத் பேரூராட்சிப் பகுதியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்; மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார்  செயல்அலுவலர்  ம. ரெங்கசாமி.
 இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நாசரேத் பேரூராட்சிக்குத் தேவையான  குடிநீர் ஆழ்வார்திருநகரியிலுள்ள உறைகிணற்றில் இருந்து  வீடுகளுக்கும், தெரு குழாய்களுக்கும்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, கோடை என்பதால் ஆற்றில் நீர்வரத்தின்றி உறைகிணறுகளில் ஊற்றுநீர் குறைந்து விட்டது. எனவே, நாசரேத் பேரூராட்சிப் பகுதியிலுள்ள மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், வீட்டிலுள்ள குடிநீர்க் குழாய்களில் மின் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சினால் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கூடுதலாக அபராதமும் விதிக்கப்படும். எனவே, மக்கள்  பேரூராட்சி நிர்வாகத்திற்கு  ஒத்துழைக்க வேண்டும்  எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT