தூத்துக்குடி

கோவில்பட்டியில் திமுக பொதுக்கூட்டம்

DIN


கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில்  கருணாநிதியின்  96ஆவது பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு  மேற்கு ஒன்றிய திமுக செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் தலைமை வகித்தார்.  பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலர் மேனகா, ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் சுப்புராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் தர்மராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., கட்சியின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் பேசினர். 
கூட்டத்தில், வடக்கு மாவட்ட துணைச் செயலர் ஏஞ்சலா, மாநில விவசாயத் தொழிலாளரணிச் செயலர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், மகளிரணி அமைப்பாளர் விஜயலட்சுமி, வழக்குரைஞரணி அமைப்பாளர் ராமசந்திரன், மாவட்ட இலக்கிய அணித் தலைவர் சோழபெருமாள், நகரச் செயலர் கருணாநிதி, துணைச் செயலர் காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செல்வமணிகண்டன் வரவேற்றார். ஊராட்சி கழகச் செயலர் முனியசாமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT