தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலராக நியமனம்:அமைச்சர் கடம்பூர் செ.ராஜுவுக்கு வரவேற்பு

DIN

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கடம்பூர் செ.ராஜுவுக்கு, கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மேளதாளங்கள் முழங்க கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர்  முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், அம்பேத்கர், ராஜாஜி, அண்ணா, சுந்தரலிங்கனார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
இந்நிகழ்ச்சியில்  நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம், கம்மவார் சங்கத் தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், தொழிலதிபர்கள் ஹரிபாலகன், சந்திரசேகர், அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலர்கள் வினோபாஜி (கயத்தாறு), அய்யாத்துரைப்பாண்டியன் (கோவில்பட்டி),  மாவட்ட துணைச் செயலர் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், மாவட்ட விவசாய அணி இணைச் செயலர் ராமசந்திரன்,  நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை, நிலவள வங்கித் தலைவர் ரமேஷ், பொது பண்டகசாலை தலைவர் ரத்தினராஜா, துணைத் தலைவர் செண்பகமூர்த்தி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் கணேஷ்பாண்டியன் (துறையூர்), அன்புராஜ் (பாண்டவர்மங்கலம்), மகேஷ்குமார் (இனாம்மணியாச்சி), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன் மற்றும் நிர்வாகிகள்  பலர் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். 
நலத் திட்ட உதவிகள் அளிப்பு: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அதிமுக மாவட்ட  துணைச் செயலர் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன் ஏற்பாட்டில், 71 ஏழைப் பெண்களுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT