தூத்துக்குடி

அமமுக வேட்பாளர்கள் 2ஆவது பட்டியல்: தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளர் - ம. புவனேஸ்வரன்

DIN

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளராக அந்தக் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் பாசறைச் செயலர் ம. புவனேஸ்வரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்தோப்பு. வழக்குரைஞராகப் பணியாற்றி வரும் இவர், எம்.ஏ., எம்.எல்., எம்பிஏ., பிஎச்.டி. முடித்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி, இளநிலை தொழில்நுட்பம் முடித்துள்ள கெளசிக் ஈஸ்வரன் என்ற மகன், மருத்துவம் 2ஆம் ஆண்டு படித்து வரும் பூஜா என்ற மகள் உள்ளனர்.
கடந்த 2016இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் முதலில் அறிவிக்கப்பட்ட ம. புவனேஸ்வரன் பிறகு மாற்றப்பட்டு, எஸ்.பி. சண்முகநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT