தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே இளைஞர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

DIN


தூத்துக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 
தூத்துக்குடி அருகேயுள்ள காலாங்கரை வடக்கு தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் லிங்கதுரை (25). இவர், அப்பகுதியில் உள்ள கோயில் அருகே வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் நின்றுகொண்டிருந்தாராம். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் லிங்கதுரையை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனராம். கழுத்துப் பகுதியில் வெட்டப்பட்ட லிங்கதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை குறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும், இந்த கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான மேகலிங்கதுரை (28), அவரது நண்பர் கோபி (23) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும், பெண்ணிடம் தகாத உறவு காரணமாக லிங்கதுரை கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT