தூத்துக்குடி

புனித சூசையப்பர் ஆலய நற்கருணை பவனி

DIN


கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நற்கருணை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இந்த ஆலயத்  திருவிழா கடந்த ஏப். 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் நற்செய்தி பெருவிழா, நற்கருணை ஆசீர், திருப்பலி ஆகியன நடைபெற்றன. திருவிழாவையொட்டி காலையில் அருள்தந்தை  ஜெரால்டு ரவி, ஆலய பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்குத்தந்தை மிக்கேல் ஆகியோர்திருப்பலி நிறைவேற்றினர். 
மாலையில் ஜான்போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற திருப்பலியில் பாளையங்கோட்டை புனித அந்தோணியார் திருத்தல அதிபர் ஆண்டோ, நாலாங்கட்டளை ஆலய பங்குத்தந்தை இம்மானுவேல் ஜெகன்ராஜா, புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை, சேசு சபை கல்வித் துறை கண்காணிப்பாளர் மாசிலாமணி ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர்.
பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நற்கருணை பவனி, ஜான்போஸ்கோ பள்ளி அருகில்இருந்து புறப்பட்டு புது சாலை வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.  இதில், பங்குத்தந்தையர்கள், உதவி பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரி புஷ்பா,  பள்ளி முதல்வர் தயாபரிவசந்தா, பங்கு பேரவையினர், அன்பியங்கள், பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT