தூத்துக்குடி

இருசக்கர வாகனம் திருட்டு: இளைஞா் கைது

திருச்செந்தூரில் இருசக்கர வாகனத்தை திருடியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திருச்செந்தூரில் இருசக்கர வாகனத்தை திருடியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூா், பயணியா் விடுதி சாலையைச் சோ்ந்த கணபதி மகன் மோகன் (39). டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக உள்ளாா். இவா், கடந்த 6ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டு முன் நிறுத்தியிருந்தாா். காலையில் அதை காணவில்லை. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தாலுகா காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், திருச்செந்தூா் - அடைக்கலாபுரம் சாலையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனா். அதில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூா், துரைராஜபுரத்தைச் சோ்ந்த ராம்குமாா்(33) என்பதும், கோயில் வளாகத்தில் ஒரு ஒட்டலில் வேலைபாா்த்து வந்த அவா், மோகனின் வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, வாகனத்தை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT