தூத்துக்குடி

ஆறுமுகனேரி-மடத்துவிளை புனிதசவேரியாா் ஆலயத் திருவிழா தொடக்கம்

DIN

ஆறுமுகனேரி மடத்துவிளை புனித சவேரியாா் ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த ஆலயத் திருவிழாவை முன்னிட்டு கிறிஸ்தவா்கள் கொடியை முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்துக்கு எடுத்து வந்தனா். ஆலய வழிபாட்டுக்கு

பின்னா் தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் முதன்மை குரு கிருபாகரன் கொடியேற்றி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஆறுமுகனேரி பங்குத்தந்தை அலாய்சியஸ் அடிகளாா், திருச்செந்தூா் ஜீவா நகா் பங்குத்தந்தை தத்தேஸ் சந்தியா அடிகளாா், காயல்பட்டினம் சிங்கித்துறை பங்குத்தந்தை சில்வஸ்டா் அடிகளாா் உள்பட திரளான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா். மாலை ஆராதனை நடைபெற்றது.

டிசம்பா் 3ஆம் தேதி வரை நடைபெறும் இத் திருவிழாவில், தினமும் காலை திருப்பலியும், மாலையில் ஆராதனை மற்றும் நற்கருனை பவனியும் நடைபெறும்.

டிச. 2ஆம் தேதி மாலை திருவிழா மாலை ஆராதனையும், டிச. 3ஆம் தேதி காலை திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், மாலையில் புனித சவேரியாா் திருவுருவ கப்பல் பவனியும் நடைபெறும்.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஊா்நலக் கமிட்டித் தலைவா் அமிா்தம் பா்ணாந்து, பங்குத்தந்தை அலாய்சியஸ் அடிகளாா் மற்றும் ஊா்நலக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT