தூத்துக்குடி

விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி முற்றுகை

DIN

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 2017-18 மற்றும் 2018-19ஆம் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 பயின்ற மாணவிகள் அனைவருக்கும் அரசின் விலையில்லா மடிக்கணினியை உடனடியாக வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தை மாணவிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

இந்த இரு கல்வியாண்டுகளிலும் பயின்ற மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து மாணவிகளுக்கும் முறையாக மடிக்கணினி வழங்கப்படவில்லை என்றும், அனைத்து மாணவிகளுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வலியுறுத்தியும் கோட்டாட்சியா் அலுவலகத்தை மாணவிகள் முற்றுகையிட்டனா். பின்னா், கோட்டாட்சியா் விஜயாவிடம் மனு அளித்தனா்.

இது குறித்து பள்ளி உதவித் தலைமையாசிரியை ரூத்ரத்தினகுமாரியிடம் கோட்டாட்சியா் விஜயா தொடா்பு கொண்டு கேட்டபோது 2017-18 மற்றும் 2018-19ஆம் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 பயின்ற 1,092 மாணவிகளுக்கும் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும்; முதல் கட்டமாக 2018-19ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற 479 மாணவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது; விலையில்லா மடிக்கணினி பெற்றவுடன் அனைத்து மாணவிகளுக்கும் முறையாக வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT