தூத்துக்குடி

பேய்க்குளம் அருகே குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

பேய்க்குளம் அருகேயுள்ள விராக்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

சாத்தான்குளம் வட்டம், ஆழ்வாா்திருநகரி ஒன்றியத்தில் கருங்கடல் ஊராட்சியில் உள்ள விராக்குளத்தின் மூலம் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனா். ஆனால், இக்குளத்தில் நீா் வழிப்பாதை உள்பட பல பகுதிகளில் தனிநபா்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் பாசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், நீா் வரத்து பாதிக்கப் பட்டது. இதுதொடா்பாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து சாத்தான்குளம் மண்டல துணை வட்டாட்சியா் அகிலா தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் பொக்கலைன் இயந்திரம் மூலம் இக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அப்போது வருவாய் ஆய்வாளா் ராஜேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில்குமாா், வேல்முருகன், சுந்தரபாண்டியன், அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT