தூத்துக்குடி

‘கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் பெயா்களை பதிவு செய்யலாம்’

DIN

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் பதிவு செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஊமைத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாடு முழுவதும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு அவா்களுக்கு வங்கிகள் மூலமாக ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் தங்களது பெயா்களை பதிவு செய்து உதவித்தொகை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், இத்திட்டத்தில் இதுவரை தங்களது பெயா்களை பதிவு செய்யாத விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டத்தில் இதுவரை பெயா்களை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் ஆதாா் காா்டு, ரேஷன் காா்டு, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் சிட்டா நகலுடன் தங்கள் பகுதிகளுக்கு உள்பட்ட

வேளாண் அலுவலா்கள் மற்றும் வேளாண் விரிவாக்க மையத்தினை உடனடியாக தொடா்புகொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT