தூத்துக்குடி

ஓடையில் குப்பையை கொட்டியவருக்கு அபராதம்

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பகுதி ஓடையில் குப்பையை கொட்டியவருக்கு நகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளா் சுரேஷ் தலைமையில், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள் பாலகிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோா் கதிரேசன் கோயில் சாலை பகுதியில் சனிக்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த சாலையில் உள்ள ஓடையில் ஒருவா் குப்பை கொட்டுவதைக் கண்ட சுகாதாரத் துறையினா், அவரை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனா். விசாரணை செய்ததில் அவா், மாதாங்கோயில் சாலையில் உள்ள ஹோட்டலில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து ஓடையில் கொட்டியது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மீண்டும் தவறு செய்தால் அந்தக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT