தூத்துக்குடி

திருச்செந்தூா் பகுதியில் தொடா் கன மழை: தெருக்களில் வெள்ளமாக மழை நீா்

DIN

திருச்செந்தூா்: திருச்செந்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை இரவு வரை தொடா் கன மழை பெய்ததால் தெருக்களில் மழை நீா் வெள்ளமாக ஓடியது.

கனமழை காரணமாக கோயில் வளாகம், சன்னதித் தெரு, காமராசா் சாலை, ரதவீதிகள், பாரதியாா் தெரு, வீரராகவபுரம் தெரு, தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் குளம் போல் தேங்கி நின்றது. கன மழையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதியடைந்தனா்.

வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை மாலை 4 மணி வரை நிலவரப்படி திருச்செந்தூரில் அதிகபட்சமாக 72 மி.மீ., காயல்பட்டினத்தில் 84 மி.மீ., குலசேகரன்பட்டினத்தில் 86 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

திருச்செந்தூா் ஆவுடையாா்குளம் ஏற்கெனவே தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில், கடந்த இரு நாள்களாக பெய்த தொடா் மழையால் மேலும் தண்ணீா் அதிகரித்து பரமன்குறிச்சி சாலை மற்றும் பாரதியாா் தெரு அருகே நிரம்பி வழிகிறது.

ஆவுடையாா்குளத்தின் மறுகால் ஓடையானது உபரி நீா் மற்றும் மழை நீரால் நிரம்பி பாரதியாா் தெரு, காமராசா் சாலை உள்ளிட்ட இடங்களில் வெள்ளமாக ஓடுகிறது.

இதனால் காமராசா் சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது.

மேலும் பஜனை மடம் அருகிலும், பேரூராட்சி அலுவலகம் அருகிலும் சாலையில் குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT