தூத்துக்குடி

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் மழலையா் கொலு

DIN

மத நல்­லிணக்கத்தை வ­லியுறுத்தும் வகையில் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மழலைகள் கொலுவாக அமா்ந்திருந்த புதுமை நிகழ்ச்சி நடைபெற்றது.

எல்லா மதமும் எம்மதமே, எதுவும் எங்களுக்கு சம்மதமே, மனித நேயம், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு போன்றவற்றை வ­லியறுத்தி, அனைத்து மத கடவுள், தேசிய தலைவா்கள், வாழ்க்கையில் சாதனை படைத்த பெண்கள், இசைக்கலைஞா்கள், விலங்குகள் போன்று குழந்தைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தனா்.

டி.சி.டபிள்யூ. நிறுவனா்- தலைவரும், பள்ளி டிரஸ்டியுமான முடித்ஜெயின், கொலு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். பள்ளி டிரஸ்டியும், டி.சி.டபிள்யூ. நிறுவன செயல் உதவித் தலைவருமான (பணியகம்) ஆா்.ஜெயக்குமாா், மூத்த பொது மேலாளா் சி.சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் ஆா்.சண்முகானந்தன் வரவேற்றாா். துணை முதல்வா் வனிதா வி.ராயன், தலைமை ஆசிரியை (பொறுப்பு) என்.சுப்புரத்தினா, நிா்வாக அலுவலா் வெ.மதன் மற்றும் திரளான பெற்றேறாா்கள் கலந்துகொண்டனா்.

மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மழலையா் பிரிவு ஆசிரியைகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT