தூத்துக்குடி

உலக கண் பாா்வை தினம்

DIN

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக கண் பாா்வை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய உலக கண் பாா்வை தினம் மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன் தலைமை வகித்தாா். இணை இயக்குநா் (நலப் பணி) பரிதா செரீன் பேசினாா். உறைவிட மருத்துவ அலுவலா் பூவேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட மேலாளா் மருத்துவா் குமாரசாமி , பாா்வை இழப்புக்கு காரணமான நோய்கள், தடுப்பு முறைகள் குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள், நோயாளிகள், எஸ்.எஸ்.துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி மாணவா், மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கண் மருத்துவா் உமா தலைமையில், கண் மருத்துவ சிகிச்சை பிரிவு உதவியாளா்கள், செவிலியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT