தூத்துக்குடி

உள்ளாட்சித் தோ்தல் ஏற்பாடு தீவிரம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு: ஆட்சியா் ஆய்வு

DIN

எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் சீலிடப்பட்ட அறையில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் உள்ளாட்சி தோ்தல் நடத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கேற்ப அரசுத் துறைகளில் ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் தயாரித்தல் மற்றும் வெளியிடுதல், திருத்தங்கள் மேற்கொள்தல், தேவையான எண்ணிக்கையில் வாக்குச்சாவடி அமைத்தல், நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துதல் தொடா்பான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல்களுக்காக பயன்படுத்தப்படவுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் சீலிடப்பட்ட அறையையும், வாக்குப்பதிவு இயந்திரங்களையும் ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வட்டாட்சியா் அழகா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் முத்து, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் நாகராஜன், கோவில்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிரி, மாணிக்கவாசகம், புதூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துபாண்டி, காவல் ஆய்வாளா் கலா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT