தூத்துக்குடி

விளையாட்டு போட்டி: பன்னம்பாறை பள்ளி  மாணவர்களுக்கு பரிசளிப்பு

DIN

பன்னம்பாறை ஆவே மரியா  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான போட்டிகளில் வென்ற மாணவர், மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிக்கப்பட்டது. 
சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை ஆவே மரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற விழா மற்றும் வட்டார அளவிலான போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தாளாளர் பீட்டர்ராஜ் தலைமை வகித்தார்.  முதல்வர் சொர்ணலதா, ஆசிரியர்கள் ஸ்ரீனிவாசன், ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார அளவில் நடைபெற்ற  கேரம், செஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் சஞ்சய்குமார், கார்த்திக் ஆகியோர்  முதலிடமும், 14 வயதிற்குள்பட்ட பெண்கள் ஒற்றையர்  பிரிவு செஸ்  போட்டியில் மாணவி மனோகரி முதலிடமும், 17,19 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவு கேரம் போட்டியில்  மாணவிகள் லிடியா,வர்ஷா, யோதிகா, குயின்ஷா ஆகியோர் இரண்டாம் இடமும், 17 வயதுக்குள்பட்ட  செஸ்   போட்டியில் அஸ்பின் ஜோல்ரின் 2ஆம் இடமும், 600 மற்றும் 100 மீட்டர் ஓட்டத்தில் மாணவர்கள் சஞ்சய்குமார், அபிஷேக் ஆகியோர் மூன்றாம் இடமும், ஈட்டி எறிதல் போட்டியில் மாணவர் ஜெகதீஸ்வரன் 3ஆம் இடமும் பெற்றனர்.  போட்டியில் வென்ற மாணவர்,  மாணவிகளுக்கு  தாளாளர் பரிசு மற்றும்  சான்றிதழ் வழங்கினார். ஓய்வுபெற்ற முதுகலைஆங்கில ஆசிரியர் அருள்ராஜ்  பேசினார்.   மாணவர், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
ஆசிரியை சூர்யா வரவேற்றார்.  உதவி ஆசிரியை ரெபிஸ்டா  நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT