தூத்துக்குடி

கோவில்பட்டி செல்வ முனீஸ்வரர் ஆலய கொடை விழா

DIN


கோவில்பட்டி ஊருணித் தெருவில் உள்ள அருள்மிகு அதிர்ஷ்ட லட்சுமி விநாயகர் செல்வ முனீஸ்வரர் கோயில் மஹாளய அமாவாசை கொடை விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
இக்கோயில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி கால்நாட்டு  வைபவம் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அக்னிச்சட்டி நகர்வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சனிக்கிழமை காலை 7 மணிக்கு தீர்த்த குடம், பால்குடம் எடுத்து தெப்பத்து சிவசக்தி விநாயகர் கோயில் முன்பிருந்து ஊர்வலமாக வந்து அய்யா செல்வமுனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கிவைத்தார். மாலை 4.30 மணிக்கு பொங்கலிடுதல், மாவிளக்கு எடுத்தல், நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை ஆகியவை நடைபெற்றன. 
ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 6 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை ஆகியன நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT