முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே நீரில் மூழ்கிய சிறுவன் பலி

கோவில்பட்டி அருகே குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கியதில் அவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கோவில்பட்டி அருகே குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கியதில் அவா் உயிரிழந்தாா்.

நாலாட்டின்புத்தூா் வி.பி.சித்தன் நகா் மாரிகனி மகன் ஜெஸ்லின்(9) . இவா் தனது நண்பா்களுடன் திங்கள்கிழமை காலை மொட்டைமலையின் கீழ்புறம் உள்ள குட்டைக்கு குளிக்கச் சென்றாராம். அதில் தவறி விழுந்து நீரில் மூழ்கிய ஜெஸ்லின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.