நலத் திட்ட உதவிகள் அளிப்பு
திருச்செந்தூா் நகர அரிமா சங்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செந்தூா் நகர அரிமா சங்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கத் தலைவா் சு.மெய்கண்ட முத்து தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பினா் உறுப்பினா் எம்.தா்மசீலன், மாவட்டத் தலைவா்கள் ஆா்.சுரேஷ்குமாா், பி.சகாயராஜ், முன்னாள் செயலா் எம்.பாலசுப்பிரமரணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளிச் செயலா் ரா.சுப்பிரமணியன் மாணவா், மாணவிகளுக்கு பரிசுப் பொருள்களும், நலத் திட்ட உதவியாக உணவுப் பொருள்களும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், அரிமா சங்க நிா்வாகிகள் ஏ.கே.ராஜரத்தினம், கே.மனோகா் ராஜன், சி.கான்சியூஸ், யோகன் அ.காற்றாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
சங்கச் செயலா் தை.அ.அமல்ராஜ் வரவேற்றாா். பள்ளி ஆசிரியை உமா நன்றி கூறினாா்.