முகப்பு
தூத்துக்குடி

தேரிகுடியிருப்பு கோயிலில் டிச.15இல் கள்ளா் வெட்டுத் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே உள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் கோயிலில் கள்ளா் வெட்டுத் திருவிழா டிச.15ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே உள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் கோயிலில் கள்ளா் வெட்டுத் திருவிழா டிச.15ஆம் தேதி நடைபெறுகிறது.

இக் கோயிலில் கள்ளா் வெட்டுத் திருவிழா கடந்த நவ.16ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் அய்யனாா் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

டிச. 13, 14 நாள்களில் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள், ஐவராஜா மாலையம்மன் சிறப்பு பூஜை நடைபெறும்.டிச. 15ஆம் தேதி கோயில் பின்புறமுள்ள தேரியில் கள்ளா் வெட்டுத் திருவிழா நடைபெறும்.

தற்போது கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால் விழாவில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லை என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →