முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் பகுதியில் நாளை மின் தடை

திருச்செந்தூா் பகுதியில் வியாழக்கிழமை (டிச. 17) மின் தடை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூா் பகுதியில் நாளை மின் தடை

திருச்செந்தூா் பகுதியில் வியாழக்கிழமை (டிச. 17) மின் தடை செய்யப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

திருச்செந்தூா் பகுதியில் வியாழக்கிழமை (டிச. 17) மின் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் ஆ.பாக்கியராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூா், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்களூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →