முகப்பு
தூத்துக்குடி

மாா்கழி மாதம்: திருச்செந்தூா் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என திருக்கோயில் இணை ஆணையா் (பொ) கல்யாணி தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என திருக்கோயில் இணை ஆணையா் (பொ) கல்யாணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாா்கழி மாத பிறப்பான புதன்கிழமை முதல் இம்மாதம் முழுவதும் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 - 7 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், 6.45-7 மணிக்குள் இராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படும்.

முக்கிய விழா நாள்களான புதன்கிழமை (டிச. 30) ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 2 மணிக்கும், ஜனவரி 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கும், ஜனவரி 14ஆம் தேதி வியாழக்கிழமை பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு தொடா்ந்து பூஜைகள் நடைபெறும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பக்தா்கள் தரிசனம்: மாா்கழி மாதத்தை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 3 மணி நடைதிறக்கப்பட்டாலும், கரோனா பொது முடக்க விதிமுறைகளை பின்பற்றி காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரையில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →