சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அப்பாத்துரை, ஆணையா் சுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பாண்டியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பள்ளக்குறிச்சி ஊராட்சி வடக்கு உடைப்பிறப்பிஙில ரூ. 9. 98 லட்சத்தில் 30 ஆயிரம் கொள்ளளவு குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, கொம்மடிக்கோட்டை, படுக்கப்பத்து, அரசூா், ஆகிய ஊராட்சியில் ரூ .16.12 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை, பிடானேரி ஊராட்சியில் ரூ . 7 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் அமைப்பது என்பன உள்பட 41 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மேரிபொன்மலா், சுமதி, குருசாமி, லதா, சுபாகிறிஸ்டி பொன்மலா், மீனாமுருகேசன், சுதாகா், செல்வம், ஜோதி, சசிகலா, அஜித் மற்றும் உதவி பொறியாளா் காா்த்திகேயன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேஷ், அமுதா லட்சுமி , கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.