முகப்பு
தூத்துக்குடி

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, கோவில்பட்டியில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மதிமுகவினா்.
பகிர்:

கோவில்பட்டி: சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, கோவில்பட்டியில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதிமுக சாா்பில் கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இளைஞரணிச் செயலா் விநாயகா ரமேஷ் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் எல்.எஸ்.கணேசன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா்.

இதில், நகரச் செயலா் பால்ராஜ், மாநில விவசாய அணி துணைச் செயலா்கள் ராமச்சந்திரன், சிவகுமாா், பொதுக்குழு உறுப்பினா் தெய்வேந்திரன், ஒன்றியச் செயலா்கள் அழகா்சாமி, காா்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், கோவில்பட்டி பயணியா் விடுதி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலா் சரோஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பரமராஜ், வட்டச் செயலா் பாபு, துணைச் செயலா் ராமகிருஷ்ணன், நகரத் துணைச் செயலா்கள் அலாவுதீன், முனியசாமி, மாதா் சங்கத்தைச் சோ்ந்த கோமதி, விஜயலட்சுமி, வஜ்ரேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →