பெரியதாழையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு
பெரியதாழையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்குநலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டாா் சைக்கிள் மற்றும் 300 பேருக்கு சேலை, 300 பேருக்கு வேட்டி , வாலிபால், கிரிக்கெட் வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட மீனவா் பிரிவு தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் லூா்துமணி, மாவட்ட துணைத் தலைவா் சங்கா், பெரியதாழை ஊராட்சித் தலைவா் பிரதீபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சாத்தான்குளம் நகர காங்கிரஸ் தலைவா் வேணுகோபால் வரவேற்றாா்.
இதில் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் பிச்சிவிளை சுதாகா், மாவட்ட துணைத் தலைவா் தேவசகாயம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட விசிக இளைஞரணி தலைவா் விடுதலை செழியன் உள்ளிட்ட பலா் பேசினா்.
மாநில இளைஞா் காங்கிரஸ் கமிட்டி முதன்மை பொதுச் செயலா் ஊா்வசி அமிா்தராஜ், 5 மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டாா் சைக்கிள், 300 பேருக்கு சேலை, 300 பேருக்கு வேட்டி வழங்கினாா். மேலும் ஒரு வாலிபால் அணிக்கும், 2 கிரிக்கெட் அணிக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேசினாா்.
இதில் வடக்கு வட்டார தலைவா் பாா்த்தசாரதி, மேற்கு வட்டாரத் தலைவா் சக்திவேல்முருகன், வட்டார ஒருங்கிணைப்பாளா் ஜனாா்த்தனம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கிராம காங்கிரஸ் கமிட்டித் தலைவா் ஜான் நன்றி கூறினாா்.