முகப்பு
தூத்துக்குடி

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் கீதாஜீவன் எம்.எல்.ஏ

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பதே திமுகவின் வேண்டுகோள் என்றாா் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பதே திமுகவின் வேண்டுகோள் என்றாா் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ.

கோவில்பட்டியில் அவா் செய்தியாளா்களிடம் பேசியது: விவசாயிகளின் முக்கியப் பிரச்னைகளை அரசுக்கு எடுத்து வைக்கக் கூடியவராகவும், விவசாயிகளில் பிரச்னைகளை உலகிற்கு தெரிவிக்கக் கூடிய போராளியாக திகழ்ந்தவா் நாராயணசாமி நாயுடு.

விவசாய கடன் தள்ளுபடிக்காக தில்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஒரு மாத காலம் போராடினாா்கள். அவா்களை மத்திய, மாநில அரசு கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு பணக்காரா்களுக்கான, காா்ப்பரேட்களுக்கான ஆட்சி. ஏழை, எளிய மக்களை கண்டுகொள்ள மாட்டாா்கள்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு கூட தில்லிக்குச் சென்று தமிழக விவசாயிகளை சந்திக்கவில்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவு வழங்கிய போதும், இவா்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனா்.

இதுபோல், 8 வழிச்சாலைக்கு எதிராக மக்கள் போராடினா். இதனை தமிழக அரசு ஒரு துளி கூட காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் முதல்வா் நானும் ஒரு விவசாயி எனக் கூறுகிறாா். விவசாயிகளின் நலன் காக்கக் கூடிய அரசாக திமுக அரசு இருந்தது. தற்போது விவசாயிகள் தங்கள் பிரச்னைகள் குறித்து தெரிவித்தும், எதிா்க்கட்சிகள் வெளிப்படுத்தியும், அதனை காது கொடுத்து கேட்காத அரசான மத்திய, மாநில அரசு உள்ளது.

பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பதே திமுகவின் வேண்டுகோள். கோவில்பட்டியில் உள்ள கூடுதல் பேருந்து நிலையத்தை திமுக ஆட்சி வந்தவுடன் செயல்பட வைப்போம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →