தூத்துக்குடி

அரசு நிதியில் இருந்து வழங்கும் நலத்திட்ட உதவிகளை தவறான சித்தரிப்பவர் அண்ணாமலை: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

DIN

கோவில்பட்டி: அரசின் நிதியில் இருந்து நலத்திட்ட உதவியை வழங்குவதை தவறாக சித்தரிக்கும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை எளவு அளவுகோலில் பேசுகிறார் என்று தெரியவில்லை என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வியாழக்கிழமை எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, செய்தியாளர்களிடம் பேசியது:   எம்.ஜி.ஆரை பழித்துப்பேசிய எவரையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை. எம்.ஜி.ஆரை மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர்.

சீமான் போன்றவர்கள் எம்.ஜி.ஆர். பற்றி பேச அருகதை இல்லை. பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை என்ன படித்திருக்கிறார் என்று தெரியவில்லை. பொங்கல் பரிசு ரூ.2,500 அதிமுகவில் இருந்து வழங்குவதாகவா கூறினோம் ? 

மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறார்கள். அவர்கள் எதிலிருந்து கொடுக்கிறார்கள்?  அரசின் பொறுப்பில் இருந்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம். அரசின் நிதியில் இருந்து வழங்குவதை தவறாக சித்தரிக்கும் அவர் என்ன அளவுகோலில் பேசுகிறார் என்று தெரியவில்லை.

மக்கள் வரிப்பணம் மக்களுக்கே சென்றுசேருவதுதான் சிறந்த ஆட்சிக்கு அடையாளம் என்பதை நாங்கள் பலமுறை நிரூபித்துள்ளோம். இது சாதாரண, பாமர மக்களுக்கு கூட தெரியும். அவர் எப்படி ஐ.பி.எஸ். படித்தார் என்று தெரியவில்லை.

கமலஹாசன் முதலில் நடித்த களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் இருந்து கடைசியாக நடித்த படம் வரை மனசாட்சிப்படி அவர் எவ்வளவு ஊதியம் வாங்கினார் என்பதை வெளிப்படையாக கூறட்டும். நாங்களும் வெள்ளை அறிக்கை வெளியிட தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

பேட்டியின்போது, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், அதிமுக ஒன்றியச் செயலர்கள் வினோபாஜி, அன்புராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT