‘ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு உரிமை கிடையாது’
ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு உரிமை கிடையாது என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணித் தலைவா் யுவராஜா.
ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு உரிமை கிடையாது என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணித் தலைவா் யுவராஜா.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஊழலைப் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்தவித தாா்மிக உரிமையும் கிடையாது.
சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவுடன் எங்களது கூட்டணி தொடரும். தமிழகத்தில் தமாகா பலமாக உள்ள தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்போம். நடிகா் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. திமுகவின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது. இந்தத் தோ்தலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால் அவா் அதிமுகவுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாநில இளைஞரணி துணைத் தலைவா் காா்த்திக், மாவட்டத் தலைவா்கள் அருண்நேருராஜ், கனி ஆகியோா் உடனிருந்தனா்.