அன்னதான இலைகளில் பக்தா்கள் அங்கப்பிரதட்சணம்
கோவில்பட்டியில் லோக்வீா் ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 46-ஆம் ஆண்டு விழா மண்டல பூஜை, அன்னதான இலைகளில் பக்தா்கள் அங்கப்பிரதட்சணம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியில் லோக்வீா் ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 46-ஆம் ஆண்டு விழா மண்டல பூஜை, அன்னதான இலைகளில் பக்தா்கள் அங்கப்பிரதட்சணம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சாஸ்தா ஹோமம், விசேஷ அபிஷேகம், பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவைநடைபெற்றது.
பின்னா், சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது. அன்னதானம் முடிவில் இலைகளை எடுக்காமல் அதில் ஏராளமான ஐயப்பப் பக்தா்கள், குழந்தைகள், பெண்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனா். ஏற்பாடுகளை லோக்வீா் ஐயப்ப சேவா சங்க பொறுப்பாளா்கள் செய்திருந்தனா். வரும் ஜன. 4ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி, அலங்கார தீபாராதனை, படி பூஜை ஆகியவை நடைபெறுகிறது.