தூத்துக்குடி

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

DIN

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியுடன் அவரது தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஏராளமானோா் மனு அளிக்க திரண்டிருந்த நிலையில், மாற்றுத்திறனாளி சிறுமியுடன் வந்த ஒரு பெண் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்கள் இருவா் மீதும் தண்ணீா் ஊற்றி பாதுகாப்பாக வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அந்தப் பெண் விளாத்திகுளம் அருகேயுள்ள அயன்பொம்மையாபுரம் நெசவாளா் காலனியை சோ்ந்த சோலைப்பெருமாள் மனைவி முனியம்மாள் என்பது தெரியவந்தது. அவா் போலீஸாரிடம் கூறியது: எனது 14 வயது மாற்றுத்திறனாளி மகளை ஐயப்பன் என்ற இளைஞா் பாலியல்ரீதியாக துன்புறுத்தினாா்.

இதுகுறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில், அவரது சகோதரா் மற்றும் உறவினா்கள் என்னையும், குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனா். அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, முனியம்மாள் தன் மகளுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT